அமெரிக்காவே அல்லது வேறு நாடு இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் யோசனை முன்வைத்தாலும் சுமத்தப்பட்டு வரும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச விசாரணைகளுக்கு இணங்க போவதில்லை என அரசாங்கத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளாது, இது பற்றி சர்வதேச சமூகததிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள தரப்பொன்று புலம்பெயர் புலிகளின் உதவியுடன் செயற்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை 8 நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு வேறு வழிகளில் ஆயுதங்களை வழங்கியிருந்தமை குறித்து தகவல்களையும் அரசாங்கம் கண்டறிந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.