இமையாளன் மத்திய விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட 10 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று திங்கக்கிழமை(04.02.2013), இமையாளன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியில் கழுகுகள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து, அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் மோதியது.
முதலில் துடுப்பாட்டத்தை தொடர்ந்த கழுகுகள் விளையாட்டுக் கழகம் 10 ஓவர் நிறைவில் 63 ஓட்டங்களை எடுத்தது, அதிகபட்சமாக கழுகுகள் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த செந்தூரன் 28 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். 64ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 37 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது ,விளையாட்டின் முடிவின்படி வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இத்தொடரில் வல்வை விளையாட்டுக் கழகம் கால்இறுதிவரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது