பிழை கண்டுபிடிக்கும் புதிய பேனா அறிமுகம் : ஜேர்மனி நிறுவனம் சாதனை

தற்சமயத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாவிட்டாலும் பேனா புழக்கம் குறைந்தபாடில்லை. பத்திரிக்கை நிருபர்கள், சட்டத்தரனிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் பாக்கெட்டிலும் பேனா கண்டிப்பாக இருக்கும். சரி, எழுதும் போது பிழை வருவது சகஜமான விடயமே. ஆனால் அடிக்கடி பிழை வரும் பட்சத்தில் தலைமை அதிகாரிகளிடத்தில் கண்டிப்பாக வசவு வாங்கவேண்டியதுதான்.
இனி, அந்த கவலை இருக்காது. இலக்கணப் பிழை மற்றும் எழுத்துப் பிழையுடன் நாம் எழுதும் பட்சத்தில் இதுகுறித்து அதிர்வுகள் மூலம் நமக்கு தகவல் தெரிவிக்கும் ஸ்மார்ட் பேனாவை ஜேர்மன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பிழையின்றி எழுதுவது எப்படி என்பதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேனா, உதவிகரமாக இருக்கும் என்று லெர்ன்ஸ்டிப்ட் என்ற ஜேர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.