வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில், நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

கொலைக் களங்கள், சாட்சியங்கள் இல்லாத போர் என்ற தலைப்பில், ஏற்கனவே 2 ஆவணப்படங்களை வெளியிட்ட சனல் 4 தற்போது நோ ஃபயர் சூன் (யுத்த சூனியப் பிரதேசம்) என்ற ஆவணத்தை வெளியிடவுள்ளது.
இதில் குறிப்பாக இதுவரை வெளிவராத ஒரு போர் குற்ற ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் காலம் மக் ரே அவர்கள் வாகை தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.