அசுர வளர்ச்சி கண்டுவரும் தொழில்நுட்பத்தினால் இலத்திரனியல் சாதனங்களின் அளவு குறுகி வருவதுடன் அவற்றின் வினைத்திறன்களும் அதிகரிக்கச்செய்யப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் தற்போது பேனா அளவே ஆன ஸ்கானர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5 மெகாபிக்சல் சென்சாரினைக் கொண்ட இந்த ஸ்கானர் ஆனது 2048 x 1536 Pixel Resolution – இல் புத்தகங்கள், பத்திரிக்கைகள் உள்ள தகவல்களை நிழற்படமாக பிரதி செய்வதுடன் அவற்றினை சேமிப்பதற்காக 1 GB சேமிப்பகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 125 டொலர்கள் பெறுமதியான இச்சானத்தில் ரெக்கார்டிங் வசதியும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.