சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடியதாக பல்வேறு வர்ணங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட Droid RAZR M கைப்பேசிகளில் தற்போது Platinum Droid RAZR M எனும் பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
அழகிய தோற்றத்துடன் காணப்படும் இக்கைப்பேசிகள் 540 x 960 Pixel Resolution மற்றும் 4.3 அங்குல அளவுடையதுமான qHD தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
இவற்றினூடு செயற்பாடு மேற்கொள்வதற்கென 1.5GHz வேகத்தினைக்கொண்ட Dual Core Processor உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியனவும் காணப்பபடுகின்றன.
இவற்றுடன் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென VGA கமெரா, 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா போன்றனவற்றினையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.