ஜேர்மனியில் குசெல்டோர்ஃப் பல்கலைக்கழகம் செவ்வாய் கிழமையன்று கல்வியமைச்சர் ஆனெட் சாவானின் முனைவர் பட்டத்தைப் பறித்துவிட்டது.
இவர், 1980ல் Person and conscience என்ற தலைப்பில் ஓர் ஆய்வேட்டை முனைவர் பட்டத்திற்காக அளித்தார்.
இவர் சமர்ப்பித்த ஆய்வேட்டின் 351 பக்கங்களில் 60 பக்கத்தை வேறொருவரின் நுாலில் இருந்து எடுத்து எழுதியிருந்தார்.
அந்த மூல நுாலாசிரியரின் பெயர் மற்றும் நுால் விவரங்களையும் குறிப்பிடாமல் மறைத்துவிட்டார். இதனால் இவர் கருத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியானார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சாவான், தான் கருத்துத் திருட்டில் ஈடுபடவில்லை என்றும் தான் எடுத்து எழுதிய நுாலில் விவரங்களைக் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
சாவானின் சட்டத்தரனி, பல்கலைக் கழகத்தின் பட்டப் பறிப்பு பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறினார்.
இப்பிரச்சினையால், சாவானின் பதவி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த 2011ல் பாதுகாப்புத் துறை அமைச்சர் கார்ல் தியோடர் குட்டன்பர்க் இதே குற்றத்திற்காக பதவி விலகும்படியான கட்டாயத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.