Search

மாலியிலிருந்து திரும்பும் பிரெஞ்சு படைகள்

இஸ்லாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலிக்குச் சென்ற பிரெஞ்சு ராணுவம் வரும் மார்ச் மாதம் அங்கிருந்து தாயகம் திரும்பும் என்பதை பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரெண்ட் ஃபேபியஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்சு இதுவரை 4000 தரைப்படை வீரர்களையும், போர் விமானங்களையும் மாலிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ராணுவத்தின் தாக்குதலால் வடக்கு மாலியில் இருந்து தீவிரவாதிகள் வெளியேறிவிட்டனர்.

தற்போது ஐ.நா வின் ஆதரவு பெற்ற ஆப்பிரிக்கப் படை 8000 ராணுவ வீரர்களோடு மாலியின் வடபகுதிப் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றது. ஏற்கனவே 3800 பேர் மாலி வந்து சேர்ந்துவிட்டனர்.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் மாலியின் பாலைவனப் பகுதியை எந்தக் காரணத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்று பிரான்சு கருதுகிறது.

எனவே இஸ்லாமியவாதிகளின் ஆதிக்கத்தையும், வன்முறையையும் தடுக்க பிரான்சும் அதன் கூட்டணி நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இதற்காகவே ஐ.நா ஆதரவுடன் ஆப்பிரிக்கப் படைகளை மாலியில் களமிறக்குகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *