மஹிந்த ராஜபக்‌ஷ வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்! 50 பேர் கைது!

மஹிந்த ராஜபக்‌ஷ வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்! 50 பேர் கைது!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா வருவதை கண்டித்தும், திருப்பதி கோவிலுக்குள் நுழையக் கூடாது என வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று தமிழர் எழுச்சி இயக்கம் சார்பாக ராஜபக்‌ஷ திருப்பதி வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது.

இவர்கள் போராடுவதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் தானாகவே முன்வந்து கோவிலை இழுத்து மூடியது. பக்தர்கள் அனைவரும் வெளியே இருந்து உள்ளே நுழையாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இப்போராட்டத்தால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடுங்கோலன் கொலைகாரன் ராஜபக்‌ஷ திருப்பதிக்கு வரக்கூடாது, அவனை திருப்பதி கோவிலுக்குள் அனுமதிக்காதே என போராட்டகாரர்கள் முழக்கம் இட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேர்களை காவல்துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது.

Leave a Reply

Your email address will not be published.