செய்திகள்

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு விஜயம்! புதுடெல்லிக்கு செல்லமாட்டார்

ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

எதிர்வரும் 9ம், 10ம் திகதிகளில் ஜனாதிபதி இந்தியாவின் பீஹார் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மஹாபோதி விஹாரையில் கலாசார மண்டபம் ஒன்றை அமைப்பதற்கு பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்க உள்ளார்.

பிஹார் மாநில முதலமைச்சர் நிமிஷ் குமாரை சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச இந்தியா பயணமானார்! புதுடில்லிக்கு செல்லமாட்டார்

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பீஹாரில் உள்ள புத்தகாயா மற்றும் ஆந்திர பிரதேஸில் உள்ள திருப்பதி ஆகிய தலங்களுக்கு செல்லும் நோக்கில், அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

எனினும் அவர் புதுடில்லிக்கு சென்று அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பீஹாரில் மஹிந்த ராஜபக்ச, அந்த மாநில முதல்வர் நித்திஸ்குமாரை சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து சனிக்கிழமை இலங்கைக்கு திரும்பும் வழியிலேயே அவர் திருப்பதிக்கு செல்லவுள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *