சொந்த மகளை கற்பழித்த தூதரக அதிகாரிக்கு மற்ற அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குழந்தையின் இந்திய தாய் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள பெங்களூரில், பிரான்சு தூதரக அதிகாரியாக பணிபுரிந்தவர் பாஸ்கல் மசுரியர். இவரது மனைவி இந்தியாவை சேர்ந்த சுஜா ஜோன்ஸ்.
இவர், தனது மூன்று வயது பெண் குழந்தையை பாஸ்கல் கற்பழித்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு பாஸ்கல் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பிணை அளித்த நீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை முடக்கியது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தையை பற்றி கவலைப்படாமல் பாஸ்கல் மசுரியருக்கு ஆதரவாக பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் செயல்படுவதாக சுஜா ஜோன்சின் சட்டத்தரனிகள், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் லாரன்ட் பேபியசிடம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாஸ்கல் மசுரியர், பிரெஞ்சு தூதரக அதிகாரி ஒருவரின் வங்கி கணக்கில் ரூ. 2.5 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர்கள், அந்த பணம் எதற்காக செலவிடப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹோலன்ட் அடுத்த வாரம் இந்திய பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி, சுஜா ஜோன்ஸ் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.