விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான சிறந்த ஆடியோ மென்பொருள்

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான சிறந்த ஆடியோ மென்பொருள்

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான சிறந்த ஆடியோ மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆடியோ கோப்புக்களை இயக்குவதற்காக விண்டோஸ் மீடியா பிளேயர் மென்பொருள் காணப்பட்டபோதிலும் சிறந்த மெட்ரோ பயனர் இடைமுகம், மற்றும் மேலதிக வசதிகள் என்பனவற்றினை உள்ளடக்கிய மென்பொருளாக AIMP Player அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

OGG, MP3, WMA, WAV, OGG போன்ற அனைத்துவிதமான ஆடியோ கோப்புக்களையும் இம்மென்பொருளின் உதவியுடன் இயக்கக்கூடியதாகக் காணப்படுவதுடன் அதிசிறந்த இசை அனுபவத்தினை தரக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவை தவிர Sensitive Equalizer, Audio Converter, Audio Ripper, Audio Recorder, மற்றும் Tag Editor ஆகவும் இம்மென்பொருள் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கச் சுட்டி

Windows 8 Media Player skin

Leave a Reply

Your email address will not be published.