வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி 16 நாள் உற்சவத்தை தொடர்ந்து குருகுல பூஜை நடைபெற்றது
குருகுல பூஜையானது மாணிக்கவாசகர் உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து
சித்திரை புதுவருட விசேட பூஜை நடைபெற்றது
அதனைத்தொடர்ந்து கோவில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சிவனடியார்கள் புடைசூல குருக்கல்களை அழைத்துச்சென்று அவரின் இல்லத்தில் தேவரபதியங்களுடன் ஆரம்பித்தது
பிரதம குருவின் ஆசீர்வாத மொழிவுகளுடன்
திருவிழா காலங்களில் சிவத்தொண்டுகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்
அத்துடன் உபசார நிகழ்வுகளை தொடர்ந்து
சிவனடியார்கள் குருக்கல்மார்களின் ஆசீர்வாதத்தை பெற்றதுடன் குருகுல பூஜை இனிது நிறைவுபெற்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வைரவர் மடை நடைபெற்று குருவின் கரங்களினால் பிரசாதங்களும் வழங்கப்பட இருக்கின்றது