உலகின் மிக நீளமான பூனை என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஸ்டீவி பூனை மரணமடைந்துவிட்டது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நெவேடா மாநிலத்தை சேர்ந்த ராபின் ஹென்றிக்சன் என்பவர் ஒரு பூனையை வளர்த்து வந்தார். ஸ்டீவி என பெயரிடப்பட்ட அந்த பூனையின் நீளம் 48.5 அங்குலம் (சுமார் 4 1/2 அடி) ஆகும்.
இந்தப்பூனைதான் உலகின் மிக நீளமான பூனை என கடந்த 2010-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பூனையின் வாலும், மிக நீளமான பூனை வால் என கின்னஸில் இடம் பிடித்தள்ளது. 8 வயதான ஸ்டீவி, சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனற்ற நிலையில் கடந்த 5ம் தேதி ஸ்டீவி மரணம் அடைந்தது. ஸ்டீவியின் மரணம் ராபின் ஹென்றிக்சன் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.