வல்வை வீதியில் வல்வை வி.க அஞ்சலிகள் பூச்செறிவு வாண்ட் பறை வெடிமுழக்க புகைமண்டலங்களுடன் குட்டியின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றுள்ளது வல்வெட்டித்துறை இளைஞர்களுடையே பெரும் சோகத்தை விதைத்து சென்ற சிவநாதன் நிமலனின் பூதவுடல் நேற்று தீயுடன் சங்கமமாகியது.
கடந்த 15 ஆம் திகதி மரமடைந்த முன்னாள் வல்வை விளையாட்டுக்கழக தலைவரும் சகல துறை விளையாட்டு வீரரும்இ பட்டக் கலைஞனுமான செல்வன் சிவநாதன் நிமலனின் (குட்டி) இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிக்கிரியைகள் நேற;று வல்வையில் இடம்பெற்றது.
சுமார் 10 மணியளவில் இறுதிக்கிரியைகள் அவரது உலகுடையார் பிள்ளையார் ஒழுங்கையில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று
வல்வை விளையாட்டுக்கழக வீரர்களின் அஞ்சலிகள் பாண்ட் வாத்திய சகிதம் ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
11 மணியளவில் தீயுடன் சங்கமமாகினார்.அன்னாரின் பால் தெளிப்பு வைபவம் நாளை காலை இடபெறவுள்ளது