பாடைகட்டி பதாதை கட்டி போகின்றாய் புலம் பெயர்ந்தவர்களின் நெஞ்சத்து நீர் அஞ்சலி
தகுதியானவர்களுக்கு தலைமை தகுதியைவழங்கியர்கள் வல்வையர்கள்
சப்பட்டைக் கொடியுன் பல காலம் தவழ்ந்த சமுதாயம்
முப்பரிமானத்தில் எழுந்து நிற்கின்றது காதல் சின்னத்தால்
வெற்றியும் தோல்வியும் தாழ்வும் உயர்வும் வாழ்வும் சாவும்
இயற்கையின் நியதிகள் சாவுக்கும் சில நியதிகள் உண்டு
நீ கருக்கொண்ட காலமே உன்சரிதம் எழுதப்பட்டது.
பாடை கட்டி போகின்ற சடங்கில் ஊர் இன்று
பதாதைகளும் கட்டி ஊர்வலம் ஆகின்றாய்.
ஊர் ஊறணிச் சுடலையிலும் வேகுவதற்கு தகுதி வேணும்
புலம் பெயர்ந்தால் பலர் நாம் தகுதி அற்றுப்போனோம்
காலையில் கணணி திறந்து காவோலைகள் கழண்ட
செய்திகளும் பார்ப்போம் ஆனால் நீ குருத்தோலை
பெரும் விளையாட்டு விழாவே இடைநிறுத்தி விட்டு அஞ்சலித்தது
எம் நெஞ்சில் நெஞ்சத்து நீர் வடிந்தது.
கண்ணீர் வடிந்திருந்தால் கண்ணீர் அஞ்சலி தந்திருப்போம்
காலம் கடந்தமைக்கு மன்னித்துவிடு குச்சத்து குட்டியே
வல்வை வரலாறும் உணக்கும் ஒரு பக்கம் எழுதி வைக்கும்.
எண்பது வயதுகான வாழ்வது வாழ்வல்ல
என்னவாக வாழ்ந்தோம் என்பதுதான் வாழ்வு.
காலம் கனியும்போது ஆயிரத்துக்கும் அதிகமான
கல்லறைகள் பூக்கும் வாசமலர்களும் மணம் பெருக்கும்
புலம்பெயர்ந்து வல்வை வாசத்துடன் வாழும் வல்வையர்கள்
சார்பில் இது சமர்ப்பணம்.
ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
குச்சம் குட்டித்துரை.
19.04.2017-இங்கிலாந்து.