கவிதா றேடர்ஸ் western union இணை அனுசரனையுடன் பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்தும்
7நபர் கொண்ட 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்டம்
நேற்று இரவு மின்னொளியில் பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதில் 8 கழகங்கள் பங்கு பற்றுகின்றன.
முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் மோதி முதலில் சென் அன்ரனிஸ் ஒரு கோலினை போட பதிலுக்கு வல்வை விளையாட்டுக்கழகம் இரண்டு கோல்களை போட்டு முன்னிலை வகிக்க சுதாகரித்துக்கொண்ட சென் அன்ரனிஸ் ஒன்பது கோல்களை போட்டது
இடைனிலையில் எத்தனை பேரையும் மாறும் நிலை கொண்டமையினால் சென் அன்ரனிஸ் மாறி மாறி விளையாட வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு மேலதிக அணிவீரர்கள் இல்லாமையினால் கழைப்படைந்து வெற்றியை இழந்தது 10:02 என்ற கோலினால்