மீட்போம் எம் இறையாண்மை
சிந்துநதிக்கரை கருவாகி
தென்பொதிகையில் உருவாகி
குமரிக்கண்டமெங்கும் தருவாகி
ஈதல் இசைபட விருந்தாகி மருந்தாகி
வியாபித்திருந்தது எம் இறையாண்மை
பின்னாளில் பெரும் பிளவாகி
முடியுடை மூவேந்தராகி
ஒன்றோடு ஒன்று மோதுண்டு
சிதைந்ததெம் இறையாண்மை
சோழமண்டலத்து அகன்ற நிலத்தில்
பெரும் மூலதனம் திரட்டாமல்
பூனூலணி பொய்மை ஆரியர்தம்
சொற்கேட்டு அவர்க்குத் தானமளித்து
தனமிழந்து இறையாண்மையும்
இழந்தோம் கவிழ்ந்தோம்
நல்லவராய் வந்த பல்லவரும்
கள்ளராய் வந்த களப்பிரரும்
வாலாட்டி வந்த நாயக்கரும்
கருவறுத்தனர் உருவழித்தனர்
எம் இறையாண்மையை வேரோடறுத்தனர்
எம் நில வளம் கண்டு ஐரோப்பியரும் வந்தனர்
ஒற்றுமையின் உயர்வாறியாமல் மூடராய்
பிரிந்து நின்ற எம்மைப் பிரித்தாண்டனர்
எம் இறையாண்மையைத் தமதாக்கினர்
அந்நிய அடிமைகளாய் இரு நூறாண்டுகள்
சிங்களவர்களின் அடிமைகளாய்
அரை நூற்றாண்டு என மயங்கிக் கிடந்தோம்
வீறு கொண்டு வந்தது ஒரு தமிழ்ப்படை
வன்னிப் பெரு நிலப்பரப்பில்
தன் கையில் எடுத்தது தமிழர்
இறையாண்மையை
மீண்டும் வந்தது ஆரியச் சதி
பன்னாட்டுக் கும்பலைத் தன்னுடன் இணைத்து
சூழ நின்று சுற்றி வளைத்து பின்னாலிருந்து
வாலியைக் கொன்றது போல்
காலியாக்கியது தமிழர் இறையாண்மையை
இன்றைய அழிபாடுகள்
நாளைய கோபுரங்களின்
அடித்தளங்களாகும்
இன்றைய அவலக் குரல்கள்
நாளைய வெற்றியிசையின்
பல்லவிகளாகும்
இன்றைய எரிந்த சாம்பல்கள்
நாளைய தோட்டங்களின்
பசளைகளாகும்
இன்றைய பின்னடைவுகள்
நாளைய பாய்ச்சல்களின்
கால் தடங்களாகும்
இன்றைய உமது கொக்கரிப்புகள்
நாளைய உங்கள் அவலக் குரல்களின்
முன்னோட்டங்களாகும்
செருப்பாய் இருப்பாய் தமிழா என
சிங்களத்தோடு கைகோத்து
இந்தியா எக்காளமிட்டாலும்
ஜெனிவாக் கிலுகிலுப்பைக்கு மயங்காமல்
துணிவோம் எழுவோம்
விரைந்து மீட்போம்
இழந்த எம் இறையாண்மையை