ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கெதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு ஹெலிகொப்டரை ஈடுபடுத்த பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
8 அங்குல நீளம் கொண்ட இந்த உளவு ஹெலிகொப்டரின் எடை வெறும் 15 கிராம் தான் என்றபோதும் அதன் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 கமெராக்கள், எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும் திறன்கொண்டவை.
ஜி.பி.எஸ். கருவி மற்றும் ‘ஜாய் ஸ்டிக்’ உதவியுடன் இயங்கும் இந்த உளவு ஹெலிகொப்டருக்கு ‘பிளாக் ஹார்னட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகொப்டர், எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்கவோ ஓசையை கேட்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.