பெண்களுக்கான மென்பந்தாட்டத்தொடரில் வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது
பெண்களுக்கான மென்பந்தாட்டத்தொடரில் வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் பெண்களுக்கான மென்பந்தாட்ட தொடர் இன்று கைக்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது .இத் தொடரில் நான்கு அணிகள் பங்குபற்றின ,முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து, வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் மோதியது. இப்போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது போட்டியில் வல்வை கழுகுகள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து, பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக் கழகம் மோதியது ,இவ் ஆட்டத்தில் கழுகுகள் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
இதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் விளையாடிய அணிகளான வல்வை கழுகுகள் விளையாடடுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதியது ,இவ்ஆட்டத்தில் கழுகுகள் விளையாட்டுக்கழகம் 2013ஆம் ஆண்டிற்கான பெண்கள் மென்பந்தாட்ட வெற்றி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது
இரண்டாம் இடத்தை வல்வை விளையாட்டுக் கழகம் பெற்றது.











