தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக ஆயிரம் கோடி ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளேன்.
யாழ்ப்பாணத்தில் தினக்குரல் பத்திரிகைகள் எரிக்கப்பட்டமைக்கு நேரடியாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது.
பத்திரிகைகளை எரிக்கும் அளவிற்கு படையினர் இழிவானவர்கள் அல்ல.
தமிழ்ப் பத்திரிகை விநியோகஸ்தர்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினையே இந்த சம்பவம் இடம்பெறுவதற்கான காரணமாகும்.
பாதுகாப்புப் படையினர் வடக்கில் பிரல்யம் அடைவதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு போலிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.