அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் ஏழு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருவதால் சாலைகளில் 3 அடி உயரத்துக்கு பனிக் குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் நியூயார்க், பாஸ்டன் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் 5,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஹீட்டர் இல்லாத காரணத்தால் பலர் உடல் வெப்பம் குறைந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பனிப் புயலால் சிறுவன் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.