Search

கராத்தேயில் வல்வை இளைஞனின் சாதனை

வல்வெட்டித்துறை தெணியம்பையை சேர்ந்த செல்வன் முரளி திபாகர் என்ற இளைஞன் கராத்தே விளையாட்டில் யாழ்மாவட்டரீதியாகவும்,அகில இலங்கை ரீதியாகவும் வெற்றிகளையும் தங்கப்பதக்கத்தையும்
பெற்றிருக்கின்றார்.
இவர் 1997ம்ஆண்டு ‘எக்ஸ்ர்கைய்'(Exerkai karate) என்ற வகையை சேர்ந்த கராத்தேயை பயிலஆரம்பித்தார்.
இந்த கராத்தேயில் முதலாவது கறுப்புபட்டியை (black belt) 2000ம்ஆண்டு பெற்றுக்கொண்டார்.
2001ல் ‘சொட்டோகன்'(Shotokan karate) என்ற கராத்தேயை பயில ஆரம்பித்தார்.
ஆரம்பநிலை பட்டிகளை பெற்று தேர்ச்சிஅடைந்து 2010ல் இந்த சோட்டோகன் கராத்தேயிலும் கறுப்புபட்டியை பெற்றுக்கொண்டார்.
17.10.2010 இலங்கைதேசிய கராத்தே சம்மேளனம் நடாத்திய வடமாகாண கராத்தே சுற்றுப்போட்டியில்
‘காட்டா’ (kata)போட்டியில் முதலாம்இடத்தை பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
இதே சுற்றுப்போட்டியில் சண்டைபோட்டியில் மூன்றாம் இடத்தைபெற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.
2010 நவம்பரில் தேசியரீதியில் வென்னப்புவஉள்ளரங்கில் நடாத்தப்பட்ட கராத்தேபோட்டியில் ‘காட்டா”குயிற்றே’ போட்டிகள் இரண்டிலும் சிறப்பாக விளையாடி ‘சிறந்த எண்மர்’ என்ற சான்றிதழ் பெற்றார்.
19 டிசம்பர் 2010ல் கம்பகா நவலோக உள்ளரங்கில் ‘கனின்யுக்தா’ அகில இலங்கை கராத்தே போட்டியில் சண்டைப்பிரிவில் வெற்றிபெற்று முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டார். (18வயதுபிரிவில்)
இதன்மூலம் சிறீலங்காவில் நடைபெறும் ’10வது சர்வதேச ‘எஸ்.கே.ஏ’ கராத்தே சாம்பியன்போட்டியில் ( 10th international S.K.A Karate Championship) கலந்துகொள்ளும் தகுதியும் பெற்றார்.
தொடர்ந்து வெற்றிகளும் பதக்கங்களும் பெற்றுவரும் செல்வன் முரளி திபாகர் அவர்களை மேன்மேலும் வெற்றிகளை பெற vvtuk.com இணையம் வல்வை மக்களின் சார்பில் வாழ்த்துகின்றது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *