ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தயாராகும் புலத்து மக்கள்!

ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தயாராகும் புலத்து மக்கள்!

அடுத்தமாதம் நடை பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறும் நாள் களில் ஜெனிவாவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.அடுத்த மாதம் 15 ஆம் திகதிமுதல் தொடர்ந்து சில தினங்களுக்கு ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கள் சபைத் தலைமை யகத்துக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐரோப் பிய நாடுகளில் உள்ள தமிழின உணர்வாளர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

இறுதிப் போரில் நடைபெற்ற உயிரிழப்புகளுக்கு நீதி விசாரணை கோரியும், இது விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டி வலியுறுத்தியுமே இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக மேற்படி பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது அதற்குப் போட்டியாக, இலங்கை அரசுக்காக ஆதரவு தெரிவித்து புலம்பெயர் சிங்கள அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் முன்னெடுப்புகளில் இறங்கியுள்ளன.
இதனால் ஜெனிவாவில் அடுத்த மாத முற்பகுதியிலிருந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நகரப் பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, ஜெனிவாவில் நடைபெறவுள்ளன புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்தும் முக்கிய தலைவர்கள் அங்கு செல்லவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published.