iPhone மற்றும் iPad சாதனங்களுக்கான Skype வசதி

iPhone மற்றும் iPad சாதனங்களுக்கான Skype வசதி

இணையவழியிலான வீடியோ அழைப்புக்களை உலகளாவிய ரீதியில் இலவசமாக மேற்கொள்ள பேருதவியாக திகழும் Skype மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அப்பிள் தயாரிப்புக்களான iPhone மற்றும் iPad என்பனவற்றிற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Skype 4.5 எனும் இப்பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் சில புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இம்மென்பொருளினை Phone 3G, iPhone 3GS, iPhone 4 மற்றும் 4S, iPhone 5, ஆகியவற்றிலும் இரண்டாம், மூன்றாம், நான்காம் தலைமுறை iPod Touch சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published.