6வது வருடமாக நடாத்தப்படும் சிதம்பரா கணிதப்போட்டி 2017க்கான விண்ணப்பங்கள் இன்று பல பரீட்சை நிலையங்களில் பெற்றுக் கொள்ளப்பட்டன.
17ஆம் திகதி June 2017 அன்று நடைபெற இருக்கும் சிதப்பரா கணிதப்போட்டி 2017க்கான விண்ணப்பப் படிவங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், பரீட்சைக்கான சுட்டிலக்கங்களும் Harrow (Hendon), Milton Keynes, Lewisham, Carshalton,Sutton, Tooting ஆகிய 6 பரீட்சை நிலையங்களில் இன்று வழங்கப்பட்டது. வழமை போல் பெற்றோர்கள் ஆர்வத்துடன் தமது பின்ளைகளின் சுட்டிலக்கங்களை பெற்றுக் கொண்டதுடன் பலர் புதிய விண்ணப்பங்களையும் வழங்கினர். எம்மால் நடத்தப்படும் சிதம்பரா கணிதப்போட்டியின் விண்ணப்ப முடிவுத் திகதி வரும் 20ஆம் திகதி May மாதம் வரை மேற் கொள்ள முடியும் என்பதனை அறியத்தருவதுடன் தொடர்ந்தும் விண்ணப்பங்களை இணையத்தினூடகவும் மேற் கொள்ளமுடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.