நரியிடம் சிக்கிய பிரிட்டன் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்(வீடியோ இணைப்பு)

தென்கிழக்கு இலண்டனில் நரி தாக்கிய ஒரு மாதக் குழந்தையின் உடல் நலம் தற்போது தேறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற போது குழந்தையின் அலறல் ஒலி கேட்டு அறைக்குள் ஓடி வந்த தாய், நரியை உதைத்துத் தள்ளிவிட்டு குழந்தையைக் காப்பற்றியுள்ளார்.

பின்னர் குழந்தையை, ஈவிலினா குழந்தை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேதமடைந்த அந்த பிஞ்சு விரல்களை மருத்துவர்கள் திரும்பவும் சரியாகப் பொருத்தியுள்ளனர். மேலும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கும் தையல் போட்டுள்ளனர்.

மேலும் குழந்தையின் உடல்நலம் தேறிவருவதால் தற்போது குழந்தை பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.

இதற்கிடையே பிரிட்டனில் நகரங்களில் நரிகளால் ஏற்படும் தொல்லை குறித்து மீண்டும் பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

வளர்ப்புப் பிராணிகளுக்கு இடும் உணவின் மணத்தால் கவரப்பட்டு நரிகள் வீட்டுக்குள் புகுவதால் வளர்ப்புப் பிராணிக்கான உணவைக் கவனமாக வைக்க வேண்டும் என்று என்று லியுஷாம் நகராட்சி தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலண்டனின் நரிக் கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்த கேஸ் பேரெட்(Cass Barrett) என்பவர் கூறுகையில், நரிகளை மனிதாபிமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.