பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்…!
வாழ்த்த நினைத்தேன்
வார்த்தைகள் கிடைக்கவில்லை
உயிராய் நினைத்தேன் – இன்று
உறவின்றி போனேன்…!
எண்ணிய பொழுதில்
எனக்கென்று இருந்தாய் அன்று
உறவின்றி பட்டமரமாய் போனேன் இன்று
இருந்தும் வாழ்த்துகிறேன்….!
என் நினைவுகள் உனக்குள்
சருகாக உதிர்ந்து போனாலும்
மீண்டும் மீண்டும் துளிர் விடுவேன்
உன் அன்பில் கரைந்ததினால்….!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை
இதயபூர்வமாக உனக்கு வழங்குகிறேன்…!
என்றும் நலமுடன் வாழ்…!