இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறும் என்பதனை உறுதி செய்யவில்லை என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.எனினும், ஊடகங்களில் வெளியான தகவல்களை பொதுச் செயலாளர் சர்மா நிராகரித்துள்ளார்.
பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவின் இலங்கை விஜயம் தொடர்பில் மட்டுமே உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. இலங்கையில் மாநாட்டை நடாத்துதல், பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை பேணிப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த இலங்கை அதிகாரிகளுடன் சமலேஷ் சர்மா பேச்சுவார்த்தை நடாத்துவார் என குறித்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் அமர்வுகள் நடைபெறும் என்பதனை உறுதி செய்யும் வகையில் சமலேஷ் சர்மா அறிவித்தல்களை விடுத்ததாக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறும் என்பதனை உறுதி செய்யவில்லை – கமலேஷ் சர்மா added by admin on View all posts by admin →