வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிரான தகவல்களை தரும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள்! கோத்தபாய

வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிரான தகவல்களை தரும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள்! கோத்தபாய

வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிரான தவறான தகவல்களை தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வழங்கி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கோத்தபாய, உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகளை வலியுறுத்துகின்றனர்.

இலங்கையில் செயல்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவத் தலைமை அழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் அது உலகளவில் பரவிய ஒரு மிகப் பெரிய இயக்கம். அவர்கள் பன்னாட்டு தொடர்புகளை பெற ஜனநாயக முகத்தை ஏற்று இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால்தான் தமிழர்கள் புலம்பெயர நேரிட்டது.

ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சர்வதேச சமூகம், இலங்கைக்கு எதிராக செயல்படுகிறது. இதனாலேயே எங்களுக்கு எதிரான குரலாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் எதிரொலிக்கிறது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.