வெலிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலை மாணவர்கள் இருவரும் நாளை விடுதலையாவர்:-

வெலிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலை மாணவர்கள் இருவரும் நாளை விடுதலையாவர்:-

யாழ்.நகரில் நடத்தப்பட்ட உணர்வு மயமான நாடகமொன்றின் இறுதியில் ஜனாதிபதி திருவாய் மலர்ந்தார்:-

வெலிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாளை விடவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உறுதி அளித்துள்ளார்.

இன்று யாழ்.நகரில் நடத்தப்பட்ட உணர்வு மயமான நாடகமொன்றின் இறுதிக்கட்டத்தில் இவ்விடுவிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியது. நிகழ்வில் ஜனாதிபதியின் சகோதரர்களான பஸில் ராஜபக்ஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்.

முன்னதாக யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டள்ள மாணவர்களது பெற்றோர் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். வடக்கு அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டமொன்று இன்று ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடாகியிருந்தது.

எனினும் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் விநாயகமூர்த்தி மற்றும் சரவணபவன் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் எவரும் இக்கூட்டத்தினில் கலந்து கொள்ளாது தவிர்த்துக்கொண்டனர்.

இந்நிலையில் அழைத்து வரப்பபட்ட மாணவர்களது பெற்றோரிடம் ஜனாதபதியிடம் தமது பிள்ளைகள் தொடர்பாக கோரிக்கை விடுமாறு கோரப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே  மாணவர்களது விடுதலைபற்றி ஜனாதிபதியின் உறுதி மொழிவழங்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.