கவிதைகள்

இதயங்களில் ஏற்றிய பெருநெருப்பு

 

 

 

 

 

 

தடுமாற்றங்களும்

குழப்பங்களும்

நிறைந்த மன நிலை

நாம் என்ன செய்ய

 

2009

உலகமே சேர்ந்து

குழப்பியது எம்மை

குவிந்தது தாயகத்தில்

பிணங்களின் குவியல்

 

கந்தக புகை நிறைந்தது எங்கும்

நச்சு புகையும் சேர்ந்தே இருந்தது

இலங்கையில் ஓரினம்

இன்னோரினத்தின் முகவரி பறித்தது

பார்த்தது சர்வதேசம்

சதியில் ஐநாவும் பங்கெடுத்தது

 

உரிமைக் குடி ஒன்றின்

உரிமை மறுப்பை

உலகம் பார்த்தது

உரத்து அறிக்கை விட்டன

சில நாடுகள்

சிறிலங்கா செய்ததை

சரி என்று!!!

 

துன்னாலைப் பிறந்தவன்

லண்டன் நகர் வசித்தவன்

மூவொன்பதாண்டு வயதுளான்

முருகதாசெனும் பெயருளான்

மூண்ட சினம் கொண்டான்

உலகுக்கு உண்மை நிலை

புகன்றிட வந்தான்.

 

ஏழு பக்கத்தில்

எழுதி முடித்தான்

மரண சாசனம்

உண்மைக்காய்

உயிர்தரும் தமிழன்

முருகதாசன் என்று

ஒப்பமுமிட்டான்

 

சுதந்திரக் கதவு

ஒருநாள் திறக்குமேன்றான்

துறந்தான் தன்னுயிர்

ஈந்தான் தன்னுடல்

சுதந்திர தீயில்

 

ஜெனிவாவில் ஐநா சபை

அதிர்ந்தாலும்

அலட்டிக்கொள்ளவில்லை

இன்றுவரை

 

இன்னவன் இழப்புக்கு

சர்வதேசமே

நீ ஒருநாள்

பதில் சொல்லியே

ஆக வேண்டும்

 

எரிந்தவன்

வாழ்கின்றான்

எம் இதயங்களில்

ஏற்றிய பெருநெருப்பாய்

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *