சிறிதரன் MPயை வரும் 18ம் திகதி நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைப்பாணை

சிறிதரன் MPயை வரும் 18ம் திகதி நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைப்பாணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீண்டும் கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18ம் திகதி குறித்த விசாரணைக்கு சமுகமளிக்குமாறு இன்று அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அலுவலகத்தில் அரசு மீட்டதாக தெரிவித்த வெடிபொருள் மற்றும் இறுவட்டு தொடர்பிலேயே மேலதிக விசாரணைக்கு சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு சமுகமளிக்ககோரும் அழைப்பாணைக் கடிதம் சிங்களமொழி மூலமே தமக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சிறிதரன் தெரிவித்தார்.

எனினும் அன்றைய தினம் அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தப்படவுள்ள கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்த கொள்ள வேண்டியிருப்பதாகவும் அத்துடன் சிங்களத்தில் எழுதப்பட்ட அழைப்பாணையில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் தம்மால் வாசித்து அறிய முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தனி தமிழ் மூலம் எழுதப்பட்ட அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிறிதரனது உதவியாளர் பொன்காந்தன் மற்றும் மாவட்ட கூட்டமைப்பு அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகிய இருவரும் தற்போது 4ம் மாடியிலேயே தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகின்றது.

Share News:

Leave a Reply

Your email address will not be published.