தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ்(வயது 26), காதலியைக் சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலர் தினமான இன்று, இவரது காதலி ரீவா ஆஸ்கரை எழுப்புவதற்காக பிரிட்டோரியா என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு அதிகாலை சென்றுள்ளார்.
அப்போது தூக்கத்தில் இருந்த ஆஸ்கார், தன்னை காதலி எழுப்புகிறாள் என்பதை உணராமல் யாரோ அத்துமீறி நுழைந்து விட்டார் என எண்ணி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே அவரது காதலி இறந்தார். ஆஸ்கார் பிஸ்டோரியசை பொலிசார் கைது செய்தனர்.
ஆஸ்கர் ஒரு மாற்றுத்திறனாளி அவர் குழந்தையாக இருக்கும்போது பிறவிக் கோளாறு காரணமாக அவரின் இரண்டு கால்களும் நீக்கப்பட்டன. அதன் பின் செயற்கைக் கால்களின் உதவியுடன் இவர் விளையாட்டுகளில் பங்கு பெற்றார். இவர் ‘பிளேடு ரன்னர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
வெற்றிகள் 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு மற்ற வீரர்களுடன் ஓடி பிரபலமடைந்தார். 2012-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
இவர் 2004-ல் ஏதென்ஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் முதன் முதலில் பதக்கம் பெற்றார். கடந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செல்வாக்குமிக்க 100 நபர்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த காதலி ரீவாவுடன் ஆஸ்கர் பிஸ்ட்டோரியஸ்