வவுனியாவில் 700 சிங்களக் குடும்பங்களை குடியேற்றினார் நாமல் ராஜபக்‌ஷ

வவுனியாவில் 700 சிங்களக் குடும்பங்களை குடியேற்றினார் நாமல் ராஜபக்‌ஷ
வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கடந்த 11ம் திகதி சிங்களக் குடும்பங்களை ஆரம்பித்து வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டம் கொக்கச்சான் குளத்தில் 700 சிங்களக் குடும்பங்களை பௌத்த துறவிகளின் ஆசியுடன் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார்.
நன்கு திட்டமிட்ட முறையில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கோடு சிறிலங்கா அரசு இராணுவ இயந்திரத்தின் முழு பாதுகாப்புடனும் வழிநடத்தலுடனும் சிங்களக் குடியேற்றங்களை வவுனியா மாவட்டத்தில் அரங்கேற்றி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.