மனித வாழ்க்கையில் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தற்போது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுவது அதிகரித்து வருகின்றது.
இதன் உச்சக்கட்டமாக பாதுகாப்பு பொறிமுறைகளும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் தற்போது Sandbox எனும் நிறுவனமானது Scout எனப்படும் வயர்லெஸ் பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாதனமானது Wi-Fi மற்றும் 3G வலையமைப்பில் இயங்கக்கூடியதாகக் காணப்படுவதுடன் பெறுமதியானது 120 டொலர்களாக அமைந்துள்ளது.