தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு . இரா . ஸ்ரீ நடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ் இல்லமெய்வன்மைப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு .அமிர்தலிங்கம் இராசகுமாரன் (தலைவர், ஆங்கில மொழி கற்கை நிலையம், யாழ் பல்கலைக்கழகம் ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இல்லமெய்வன்மைப் போட்டி தொடர்பாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பா.அ.சங்கம், ப.மா. சங்கம், மற்றும் பா.மே. குழு ஒன்றாக இணைந்து வெளியிட்டுள்ள அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.