1½ வயது குழந்தையின் வயிற்றில் 42 காந்த உருண்டைகள் : வைத்தியர்கள் அதிர்ச்சி

ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் பகுதியை சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை கடந்த சில நாட்களாக இடைவிடாது அழுதபடியே இருந்தது. இதனையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த குழந்தையின் தாய் தூக்கிச் சென்றார். மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தையின் அழுகைக்கு வயிற்று வலிதான் காரணம் என்பது தெரிய வந்தது.

வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் திகைத்துப் போயினர். வயிற்றினுள் சிறிய உருண்டையான பொருட்கள் காணப்பட்டன. அப்போது தான் அந்த குழந்தையின் தாய்க்கு தனது வீட்டு ஃப்ரிட்ஜில் ஒட்டப்பட்டிருந்த காந்தக உருண்டைகள் திடீர் திடீரென மாயமாகிப் போன ரகசியம் புரியவந்தது. இதனையடுத்து, அந்த குழந்தைக்கு அவசர அறுவைசிகிச்சை நடத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த அறுவைசிகிச்சை மூலம் அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த 42 காந்தக உருண்டைகள் அகற்றப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published.