வன்னியில் நெடுங்கேணி மாறா இலுப்பையில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுங்கேணி மாறா இலுப்பை மகிழமோட்டையைச் சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி பிரேமசீலன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று சென்றுள்ளது.
இதில் உன்னை கொலை செய்வோமென மிரட்டல் விடுக்கப்படவே இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு அருகிலுள்ள இராணுவ பொலிஸ் காவலரணுக்குச் சென்று முறையிட்ட போது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவர்கள் கூறவே இருவரும் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த நபர் வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்டுள்ளார்.