ஐ.நா தீர்மானம் இலங்கைக்கு சவலாக அமையும்

ஐ.நா தீர்மானம் இலங்கைக்கு சவலாக அமையும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம், இலங்கைக்கு சவலாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான சில உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.

பல்வேறு துறைகள் தொடர்பில் விசாரணை நடாத்த ஐ.நா பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நகர்வானது இலங்கைக்கு பெரும் சவாலாக அமையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, மனித உரிமை விவகாரம், கருத்துச் சுதந்திரம், சட்டவிரோத படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில்ழ ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு சென்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய தீர்மானம் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கு தடையின்றி இலங்கைக்குள் பிரவேசித்து விசாரணை நடாத்த அனுமதியளிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.