ரஷ்யாவை தாக்கிய எரிகல் பற்றி நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

ரஷ்யாவை தாக்கிய எரிகல் பற்றி நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

ரஷ்யாவில் யுரல் மலைப் பகுதியில் கடந்த 15ம் திகதி விழுந்த சிறு நட்சத்திர வகையை சேர்ந்த அந்த எரிகல் சுமார் 10 தொன் எடையும், 55 அடி அகலமும் கொண்டவை.

54 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் ஒளிப்பிழம்பை உமிழ்ந்த படி வந்து தரையில் விழுந்த அந்த எரி நட்சத்திரம் மோதுவதற்கு முன்பு 3 துண்டுகளாக உடைந்துள்ளது.

இதனால் நான்குபுறமும் சிதறி விழுந்த எரிகல்லின் துகள்கள் தாக்கியதில் சிலியா பின்ஸ்க் நகரில் சுமார் 1200 பேர் காயம் அடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை விட இந்த எரிகல் அதிக சக்தி கொண்டவை என்றும் ஜப்பான் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 30 மடங்குக்கும் மேலான வேகத்துடன் வந்து விழுந்துள்ளது எனவும் அமெரிக்காவின் “நாசா” மார்ஷல் விண்வெளி மையத்தின் எரிகல் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் பில் கூக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அந்த எரிகல் 50 கிலோ தொன் சக்தியுடன் சூரியனை விட மிக பிரகாசமான நெருப்பு பந்து போல் வந்து விழுந்தது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.