நிரூபணம் ஆகும் கொடூரப் போர்க்குற்றம்!!!

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளை நாம் கண்டு அதிர்ந்துள்ளோம். ஆனால் இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என THE INDEPENDENT பத்திரிகையில் Callum McRAE தனது சிறப்புப் பத்தியில் விபரித்துள்ளார்.

ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன் இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில்.

அந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப் புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது. இந்தச் சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. சிறீலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள் இராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இவரது உடலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது. ஆனால் இப்போது  சிறீலங்கா இராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது.

இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்ப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. இது மிகவும் இராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில் இராணுவத்தாலே அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக் குழுக்களாலோ  மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட படுகொலையாகும். அதுவும் ஒரு சிறுவன் மீது.

கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள்  ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு  செய்துள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன்  மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும் குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார்.

மேலும் அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்ங்களுங்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்தள்ளார். அதன் பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கபட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பாலச்ந்திரனின் உடலத்தின் அருகில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்ப்பட்டுள்ளது. ஆனாலும் மகிந்த இராஜபக்ச அரசு இன்னமும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கப்போகின்றது. ஆனாலும் ஒரு தரப்பு குற்றம் செய்ததென்பதற்காக அரசாங்கம் கொடூரக் குற்றங்களைச் செய்வது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை. இது நீதி விசாரணை முன் சிறீலங்கா அரசை நிறுத்தவதன் மூலமே பாதிக்ப்பட்டவர்களுக்கான நீதி பெறப்படும்.

Leave a Reply

Your email address will not be published.