
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. மனித உரிமை நிலைமைகள், நல்லிணக்கம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது. இந்தக் காரணிகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
சிரியா, மாலி, மியன்மார், கொங்கோ, எரித்திரியா, சூடான் மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.