ப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பிறகு கருத்து தெரிவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதுடைய பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றதை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வீடியோ.
மனித உரிமைகளை மீறிய இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பிரபாகரன் மகன் கொடூரமாக இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் இன்று கருத்து கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, பிரபாகரன் மகன் வீடியோவை பார்த்த பிறகு கருத்து தெரிவிப்பதாக கூறினார்.
அதேவேளை, இன்று பிரித்தானிய ஊடகமொன்றில் இது தொடர்பான படங்கள் வெளிவந்த பின்னர் இது குறித்து தமிழகத்தின் பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ள போதிலும் திமுக தலைவர் கருணாநிதி இதுவரை எவ்வித கருத்தக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







