பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகளின் அரையிறுதி ஆட்டம் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
நவஜீவ்னஸ் வி.க எதிர்த்து கலைமதி வி.க மோதியது. ஆட்டத்தில் 1 : 0 என்ற கோல் கணக்கில் நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் வதிரி மெம்மர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதவுள்ளது.