Search

பிரான்ஷ் வல்வை புளூஸ் வெற்றி வாகை சூடியது 03.06.2017

03.06.2017  jaltran sports club நடாத்திய உதைபந்தாட்டத்தில் பிரான்ஷ் வல்வை புளூஸ் முதலாவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டுள்ளது                                                                                                                                                                                                                                                                                                       8 வருட கடும் முயற்சியினால் வெற்றிபெற்ற பிரான்ஷ் வல்வை புளூஷ்க்கு வல்வை விளையாட்டுக்கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

மேஜர் முரளி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுக் கிண்ணப் போட்டி.

நேற்றைய தினம் பாரிஸ் லாக்குர்நேவ் பிரான்சில் யாழ்டன் உதைபந்தாட்டக் கழகத்தினால் பதினாறாவது ஆண்டாக நடத்தப்படும் மேஜர் அல்ஃப்ரட் கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் மற்றும் பாலகன் பாலச்சந்திரன் நினைவாக உதபந்தாட்டப் போட்டி நடாத்தப் பட்டது. பிரான்சு நாட்டில் விளையாடிவரும் பல விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றிய இப்போட்டியில் வல்வை புளூஸ் பிரான்சு விளையாட்டுக் கழகமும் பங்கு பற்றி விளையாடியது. A பிரிவில் யாழ்டன், விண்மீன்கள், அரியாலை ஆகிய அணிகளுடனான சுற்றுப் போட்டியில் விளையாடி யாழ்டன் அணியுடன் தமது பிரிவிலிருந்து காலிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது. அரியாலை அணியுடனான ஆட்டத்தில் 2 – 0 என்ற கோல் கணக்கிலும் விண்மீன்கள் அணியுடனான ஆட்டத்தில் 3 – 0 என்ற கோல்கணக்கிலும் அரையிறுதிக்குத் தகுதி பெறனர். அரையிறுதியில் நல்லூர் ஸ்தான் அணியுடன் 2 – 0 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பின்னர் யாழ்டன் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய யாழ்டன், வல்வை புளூஸ் பிரான்சு இரு அணிகளும் ஆட்டத்தின் முதல் பகுதி நேரத்தில் கோல்கள் அடிக்காத நிலையில் இடைவேளைக்குப் பின்னரான இரண்டாவது பகுதி நேரத்திலும் இரு அணிகளும் பலமாக மோதின. இறுதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் அடிக்காமல் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது. பின்னர் காலம் தாமதமான நிலையில் போதிய வெளிச்சமின்மை கருதி ஆட்டம் தண்டவுதை பகுதிக்குத் தள்ளப்பட்டது. தண்டவுதை ஆட்டத்தில் வல்வை புளூஸ் அணியினர் அனைவரும் கோல்கள் அடித்த நிலையில் யாழ்டன் அணியினர் தண்டவுதையில் ஏழு பந்துகளில் ஒரு பந்தினை வல்வை புளூஸ் அணியின் காப்பாளர் தடுத்தமையினால் போட்டி 7 – 6 என்ற கோல் கணக்கில் வல்வை புளூஸ் அணியினர் வெற்றியைத் தமதாக்கி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேஜர் முரளி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுக் கிண்ணப் போட்டியின் தொடர் நாயகனாக வாசு மற்றும் ஆட்ட நாயகனாக ரமணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் வல்வை புளூஸ் பிரான்சு அணியின் தளரா நம்பிக்கையும் ஆட்டத்தின் தொடக்கநிலையில் ஊடகத்திற்கு அளித்திருந்த வெல்வோம் என்ற உத்வேகமும் கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.