வல்வையர் வரலாற்றில் வல்வை இளைஞர்கள்
புலிக்கு முன்னர் பூகம்மாக புறப்பட்ட வரலாறு ஒன்றுன்டு
இரவுப்பாடசாலை தும்புத்தொழிற்சாலை
வல்வையரின் வாழ்வியலுக்கு பலமானா அஸ்திவாரமிட்டதுதான்
அன்றைய இரவுப்பாடசாலை
எமது வாழ்வியலில் இன்று வரை சங்கமித்துக்கொண்டிருக்கும்
சமயம் கணக்கியலை போதித்தவர்
அன்றைய இளைய சமுதாயம வல்வை மண் வாசத்தில்
அக்கறையின் சாட்சிதான் ஜயர் மாஸ்டரின் நட்பு வட்டம்
ஜயர் ஜயா அவர்கள் கோடிமாரியின் மணியம் என்ற மகுடததிற்கு முன்
அம்பாளின் களஞ்சிய அறையின் தொண்டுகள்தான்
வல்வையரின் வாசமாக இருக்கின்றது
அம்பாளின் உருத்திரா அபிசேகத்துக்கான சமத்துக்கட்டு
சேகரிக்கும் பல காலத்தொண்டனாக
அம்பாளின் பூமாலைத் தொண்டனாக
வாய்கட்டி பூசையேற்கும் ஆற்றங்கரையானுக்கும்
பூத் தொண்டனாக
நாங்கள் பண்டமாற்று தொழில் செய்து பகட்டாக வாழ்ந்தபோது
பழையாட்சாரமும் நைநோலோன் சேட்டும் பொக்கற்றில்
கிப்ஸ் லேஞ்சிக்கு முன்னர் ஜம்பது ரூபா தெரிய நாகரீகம்
தவழ்ந்த மண்ணில்
எழிமை இறைமை தூய்மை உண்மை செய்மை என்ற பற்பல
பெருமைகளுக்கு உரித்தானவர் நீங்கள்
வல்iயில் புனிதர் என்ற பெருமைக்குரிவர்களை
வல்வை வரலாற்றில் தேடிப்பார்க்கவேண்டும்
வல்வை வரலாறை மீண்டும் பெருமையாக வரையத்தொடங்கிய
வல்வையின் இரவுப்பாடசாலை சமூகம்
உங்களை
வல்வையின் புனிதராக கௌரவிக்கின்றது.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
புனிதமான பணிவுடன்
வல்வை இரவுப்பாடசாலை சமூகம்
08.06.2017
(சோ.செ.தெய்வச்சந்திரன்)