Search

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் 12.06.2017

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் 2017

கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று சிறப்பாக நடைபெறவுள்ளது .

இன்று அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியது.

ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக காணப்படும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளையும், அற்புதங்களையும் கொண்டு காணப்படுகின்றது.
இவ்வாலயத்தின் உற்சவ காலங்களில் முல்லைத்தீவு கடலில் எடுக்கப்பட்ட கடல் நீரில் ஒரு வாரத்திற்கு மேலாக விளக்கு எரிக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.

அத்துடன், பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், தூக்குக்காவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி, பாற்செம்பு, அங்கப்பிரதட்சனை கண்ணகி ஓர் பாத யாத்திரை போன்ற பல வழிபாடுகளில் ஈடுபடுவதும் சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இன்று அதிகாலை ஆரம்பமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம் நாளை வரை சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *