வற்றாப்பளை கேப்பாப்புலவு பிரதான வீதித் தடை நாளை நீக்கப்படும்! இராணுவம் அறிவிப்பு!!
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் பக்த அடியார்கள் புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை பிரதான வீதியூடாக தடைஎதுமின்றி பயணிக்க முடியுமா என பக்த அடியார்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
குறித்த பிரதான வீதி வழி இடையே கேப்பாப்புலவில் இந்த வீதியை நீண்ட காலமாக இராணுவத்தினர் தடை செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (11) தொடக்கம் எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை வரைக்கும் குறித்த வீதித்தடையை நீக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் படையினருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த வீதித்தடை நாளை நீக்கப்படும் என்று இராணுவத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் புதுக்குடியிருப்பு தொடக்கம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் வரைக்கும் குறித்த பிரதான வீதி சீராக புனரமைக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் அடியார்கள் எவ்வித சிரமங்களுமின்றி குறித்த பிரதான வீதி வழியாக ஆலயத்திற்கு செல்ல முடியும் என இராணுவத் தரப்பினர் மேலும் தெரிவித்தும்
குறித்த வீதித்தடை நாளை நீக்கப்படும் என்று இராணுவத் தரப்பினர் தெரிவித்தும் வீதித்தடை நீக்கப்படவில்லை கண்ணகி பக்த பாத யாத்திரிகள் தினரினார்கள் பக்தர்கள் அல்லோலம் சிறுவர்கள் துடிதுடிப்பு முதியவர்கள் ஆதங்கப்பட்டார்கள் கரடு முரடன காட்டுப்பாதையை காட்டி (6-8km) கூட சுற்றிச்செல்லுமாறு உத்தரவிட்டார்கள் ஏன் என கேட்டதற்கு பெரியதுரையின் கட்டளை என கூறினார்கள்