இணையத்தில் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனமானது ஸ்டிரிட் வியூ(Street View) என்ற வசதியையும் வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில்உள்ள முக்கிய நகரங்களின் தெருக்களையும் தெளிவாக காண முடியும்.
இந்த வசதியைப் பயன்படுத்திய ரஷ்யாவைச் சேர்ந்த மரினா வாய்னோவா என்ற பெண் தனது காதலனை கையும் களவுமாக பிடித்தார்.
இவர் வழக்கம் போல் இந்த வசதியைப் பயன்படுத்தி தனக்கு தேவையான தகவல்களை கூகுள் மேப்பில் உள்ள ஸ்டிரிட் வியூயை பார்த்துக் கொண்டிருந்த போது தனது காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் கோபமடைந்த இவர் தனது காதலனுடான உறவை முறித்துக்கொண்டார். காதலன் மன்னிக்குமாறு கெஞ்சியபோதும் இவர் சமாதனமடைய மறுத்துவிட்டார்.